Show all

பளிச்சிடும் முன்னேற்றத்தின்திறவுகோல்! வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில்

உங்கள் முன்னேற்றத்திற்கான திறவுகோல் வெறுமனே ஒன்னே முக்கால் அடி தொலைவில்தான் வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திறவுகோலைப் பார்த்தவர்கள் உண்டு. அந்தத் திறவுகோலை எடுத்துப் பார்த்தவர்களும் உண்டு. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக அந்தத் திறவுகோல் என் முன்னேற்றத் திறப்பிற்கானது என்று அறிந்த ஒற்றைத் தமிழனும் எனக்குத் தெரிந்து இல்லை. உங்களை அந்தக் கமுக்;கம் அறிந்த தமிழனாக மாற்ற முயல்கிறது இந்தக் கட்டுரை.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆம்! வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில் அல்லது ஏழு சீர் தொலைவில் உள்ள அந்த உங்கள் முன்னேற்றத்தின் திறவுகோலை, வெறுமனே அறுபத்;தெட்டு ஒலியன் பயண நேரத்தில், அதுவும் உங்கள் செயல் முயற்சியில் கூட அல்ல- உங்கள் சிந்தனை முயற்சியிலேயே தொட்டு விட முடியும். 

ஆனால் ஒவ்வொரு தமிழனும் முன்னேற்றத்திற்கான திறவுகோலை உலகெங்கும் அலைந்து அலைந்து பற்பல அயல்களின்; பாதம் கழுவி, அதன்வழியாகத் தனித்தனியாக ஒவ்வொரும் தான் பெற்ற முன்னேற்றத்தையும்; முன்னேற்றத் திறவுகோலையும் மலைத்து பறைசாற்றித் திரிகின்றனர். ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரம் ஆண்டுகளாக.

இந்த அனுபவங்களை கொண்டாட பல ஆயிரம் நூல்களை எழுதி, அவற்றை வைத்து பல ஆயிரம் தமிழர்களை மூளைச் சலவை செய்திருக்கிறோம். 

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரத்தை மட்டுமே அந்த வகை மூளைச்சலவையை தவிர்த்த தமிழ் நூல்காளக் கொண்டாட முடியும்.

அறிவு வளர்ச்சி பெற்ற இன்றைய கணினி யுகத்திலும் ஏராளமான கணினி பக்கங்களையும் அந்த வகைக்கு வீணடித்து வருகிறோம். இவைகள் எல்லாம் பொது வெளியில் மட்டுமல்ல தமிழர் மூளைகளிலும் தூய்மைப் படுத்த முடியாத குப்பைகளாக மண்டிக் கிடக்கின்றன.

நேரடியாக, வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில்,  அறுபத்;தெட்டு ஒலியன் பயண நேரத்தில் எடுக்க முடிகிற, இந்த முன்னேற்றத் திறவுகோலை எடுக்க, ஒவ்வொரு தமிழனும் பலஆயிரம் அயல் தொன்மக் குப்பைகளை அள்ளி அள்ளி வீசி விளையாடுகிறான். 

நேரடியாக, வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில்,  அறுபத்;தெட்டு ஒலியன் பயண நேரத்தில் எடுக்க முடிகிற, இந்த முன்னேற்றத் திறவுகோலை எடுக்க ஒவ்வொரு தமிழனும் பல்வேறு மதங்களை சார்ந்து இயங்குகிறன். 

நேரடியாக, வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில்,  அறுபத்;தெட்டு ஒலியன் பயண நேரத்தில் எடுக்க முடிகிற, இந்த முன்னேற்றத் திறவுகோலை எடுக்க ஒவ்வொரு தமிழனும் பல்வேறு சடங்கு நடைமுறைகளில் மூழ்கித் திளைக்கிறான். 

நேரடியாக, வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில்,  அறுபத்;தெட்டு ஒலியன் பயண நேரத்தில் எடுக்க முடிகிற, இந்த முன்னேற்றத் திறவுகோலை எடுக்க ஒவ்வொரு தமிழனும் அயல் தொன்மங்களுக்கான கோயிலைக் கட்டுகிறான். அவ்வகை கோயில் கோயிலாக அலைகிறான். 

நேரடியாக, வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரத்தில்,  அறுபத்;தெட்டு ஒலியன் பயண நேரத்தில் எடுக்க முடிகிற, இந்த முன்னேற்றத் திறவுகோலை எடுக்க ஒவ்வொரு தமிழனும் ஆங்கில வழிக்கல்வியைத் தேடி அலைகிறான். இன்னும் சிலர் நம்மிடம் பாணிபூரி விற்கும் அயலவர் மொழியில் அந்த முன்னேற்றத் திறவுகோல் இருக்கிறது என்று கதையோ கதையென்று கதைத்து வருகின்றனர்.

நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு திரங்கள் இருப்பதை நீங்களும் உலகமும் அறிவீர்கள். அந்த நான்கு திரங்களின் மாறுபாடுதாம் மனிதன் என்பதை தமிழரில் பலர்கூட அறிவார்கள். ஆனால் தமிழர் பட்டியல் இட்டதோ ஐந்திரம் என்று நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்று ஐந்து ஆற்றல்களை. 

அந்த, ஐந்தாவதாகப் பட்டியல் இட்ட விசும்பை- தமிழ்முன்னோர் அன்றி உலகினர் யாரும் இன்றுவரையிலும்கூட அறிய மாட்டார்கள்.

அந்த விசும்பு குறித்து அறிந்து கொண்ட தமிழ்முன்னோர், தாங்கள் மட்டும் பயனடைவதோடு ஒட்டுமொத்த உலகமும் பயனடைய வேண்டும் என்றே கருதினர். 

முதல் கடலோடியாக கடற்கரை அமைந்த நாடுகளுக்கு எல்லாம் கப்பல்கட்டி பயணித்து, தன் முன்னேற்றத்தில் விளைவித்த பொருள்களையெல்லாம்- தன்மண்ணில் அரிதான குதிரை, பொன் பொருள்களுக்கு பண்டமாற்றினான் தாம் கண்டறிந்த விசும்புதிரம் குறித்தும் விளக்க முயன்றான்.

உலகினரோ தமிழனின் மெல்லிய துணி, மணப்பொருட்கள், மயில்தோகை, முத்து ஆகியவற்றை பண்டமாற்றினர். தனை ஈன்றபெற்றோரை அழைக்க அம்மா அப்பா என்கிற சொற்களை கொடையாகப் பெற்றனர். 

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உயரிய பாங்கிற்கு தமிழர் அமைத்துக் கொண்டிருந்த திருமணத்தை கொடையாகப் பெற்றனர். 

கப்பலில் கடலோடும் கலையைக் கொடையாகப் பெற்றனர். எண்கள், அதில் சுழியம், கணியம் என்கிற எண்ணியல், வானியல் எல்லாமும் கொடையாகப் பெற்றார்கள். அவைகளில் தங்கள் திறமைகளை மேலுமாக வலுப்படுத்தி உலகினர் தமிழரிலும் சிறப்பாக கடும்பாடாற்றி முன்னேறி வருகின்றனர். 

ஆனால் மிக எளிதாக முன்னேற்றம் தரும் விசும்பு குறித்து மட்டும் இன்னும் உலகினரில் யாரும் புரிந்;து கொள்ளவேயில்;;;லை. ஒவ்வொருவர் முன்னேற்றத்திற்கும் சுற்றி, வளைத்து, சிக்கி, சிதைந்து நீண்ட தொலைவே பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இற்றைத் தமிழரும் அந்த வௌ;வேறு அயல்களில் தங்களின் வாழ்மானம் இருப்பதாகக் கருதி ஒவ்வொருவரும் வௌ;வேறு அயல்களின் பின்னால் பயணித்து தமிழர்கான தனிவரிசை பேணாது, வௌ;வேறு அயல்களின் பின்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அயலின் பின்னால் நின்று தமிழர் தொன்மை தொலைத்து வருகின்றனர். 

விசும்பு என்றால் என்ன? அது எப்படி நமது முன்னேற்றத்திற்கான ஆற்றல் ஆகிறது? என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டால் உங்கள் முன்னேற்றம் வெறுமனே ஒன்னே முக்கால் அடி தூரம் மட்டுமே.

விசும்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாத வரை தமிழர் முன்னேற்றத்திற்கான முயற்சி நெடும்பயணமே. அதுவும் முயல்கிறவரின் ஐம்தெட்டு அகவைக்கு மட்டுமானது மட்டுமே கிடைக்கும் முன்னேற்றம். அடுத்த தலைமுறை அது தனியாக போராட வேண்டியிருக்கும். 

விசும்பு என்பதை ஐந்தாவது ஆற்றல் என்று மேலோட்டமாகப் படித்துவிட்டு ஓ! ஆகாயம் அல்லது ஸ்கைதான் அந்த திரமா (பூதம்) என்று கடந்து விடுகிறது உலகம்.

ஆனால் விசும்பு குறித்து தமிழ்முன்னேர் தெளிவுபடுத்தியிருந்ததை நான் அறிந்தது நெடும்பயணம் ஆகும். நிலம், நீர், தீ, காற்று ஆற்றல்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ்முன்னோர் பட்டியல் இட்டிருக்கிற விசும்பு- உலகினரின் ஆகாயம் அல்லது ஸ்கை என்றால் அது எப்படி ஆற்றல் ஆகமுடியும் என்ற எனக்குள் எழுந்த வினாவில்தான் தொடங்கியது என்பயணம்.

விசும்பு என்பது வெளியின் மூன்றாவது நிலையாகும். விசும்பிற்கும் வெளிக்கும் இடைப்பட்ட நிலை விண்வெளி ஆகும். வெளி என்பது- தான் தோன்றி இயக்கம் அற்றதும், எல்லையில்லாததும் தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களுக்கு கடந்தும் உள்ளும் இருக்கிற திரம் ஆகும். அதனால் விசும்பு தமிழ்முன்னோரால் கடவுள் என்றும், அதில் இறைந்;து காணப்படுகிற உடைய நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள் இறை என்றும் கொண்டாடப்பட்டது. இனி விசும்பு என்பதை கடவுள் என்றே பேசுவோம்.

கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பது என்றே பொருள். கடவுள் ஆண்பாலோ பெண்பாலோ அல்ல. எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளியின் மூன்று நிலைகளையே கடவுள் என்கிறது தமிழ். 

அந்த மூன்று நிலைகள்: 1.தான் தோன்றி இயக்கம் இல்லாத, எல்லையில்லாத, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளி. 2.அந்த வெளியில் குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய, தான்தோன்றி இயக்கம் உடைய, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று நம் எல்லோராலும் இயக்கம் பெற்ற இரண்டாவது நிலை விண்வெளி. 3.தனக்கு இயக்கம் வழங்கிய நம் அனைத்தையும் இயக்க எதிரியக்க முனைப்பான விசும்பு என்பனவாகும். விசும்புதல் என்றால் குழந்தைகள் அழும்போது அடக்க முடியாமல் எழுகிற அந்த விசும்புதலைக் கொண்டதுதான் விசும்பு. 

நியூட்டனின் மூன்றாவது விதி நிகழக் காரணம் இந்த விசும்புதான். எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை என்பதுதானே அந்த விதி. அந்த விதியை முன்னெடுப்பதுதான் இந்த விசும்பு. ஆகவே கடவுள் என்பதை வேறு எவற்றோடும் பொருத்த முடியாது. 

கடவுள் என்பது கணினியில் உள்ள வண்தட்டு போன்றது. அது இல்லாத ஒன்றாக, எல்லை இல்லாத ஒன்றாக இருந்து, தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திரங்களால் இயக்கம் பெற்று அவைகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.

ஆக, நாம் இயக்க, நம்மால் இயக்கம் பெற்று நம்மை இயக்குவததூன் விசும்பு என்று தமிழ் முன்னோர் கண்டறிந்த அடிப்படையில்- உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருளே ஆகும். 

உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம் என்று தமிழ் முன்னோர் முன்னெடுத்தனர். அந்த மந்திரம் குறித்து எழுதுவது தனிக் கட்டுரைக்கான தலைப்பாகும்.

ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் தன் ஐந்து அகவைக்குள் தன் தாய்மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து அதை தனக்கான தலையெழுத்தாக விசும்பில் எழுதிவிட்டு சாதிக்கிறது. 

ஆனால் ஐந்து அகவைக்கு முன்பாகவே, குழந்தைகளின் விருப்பம் இல்லாமலேயே, பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை அந்தக் குழந்தையின் மீதாக திணிக்கும் முகமாக மழலையர்ப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைக் கையளிக்கின்றார்கள். நீங்கள் உங்கள் தலையெழுத்தை யாரோ எழுதுவதாக நம்புவதைப் போல அந்தக்குழந்தையும் தன்னுடைய தலையெழுத்தை பெற்றோர், ஆசிரியர், சுற்றம், நட்பு, உங்களால் அடையாளம் காட்டப்படுகிற தெய்வம் என்று யார்யாரோ தம்முடைய தலையெழுத்தை எழுதுகின்றனர் என்ற முடிவுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பிழைப்பு நடத்தத் தொடங்கி விடுகிறது. 

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிற தமிழர் மந்திரச் செய்தியை மறந்து விட்டு, தனக்கான நன்மையைப்  பிறர் தரவில்லையே என்றும், மற்றவர்கள் தீமையையே தருகிறார்கள் என்றும் புலம்பி அந்தப் புலம்பலையே தன்னுடைய தலையெழுத்தாக வடிவமைக்கத் தொடங்கி அதையே திரும்பப் பெறுகின்றன. 

இதை மாற்றியமைத்து நமது குழந்தைகளின் தலையெழுத்தை அவர்களே எழுதிக் கொள்ளும் முகமாகவே நம்மை முன்னெடுக்க, தமிழ் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற மந்திரம் குறித்து நாம் அறிந்து கொள்ள முயன்றால் அது தனித் தலைப்பாகும். 

ஆக கடவுள் என்பது ஆண்பாலோ பெண்பாலே அல்ல. கடவுள் நம்மை படைத்தான ஒன்றும் அல்ல. நம்பிக்கைக்கு உரியதல்ல கடவுள். அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கானது கடவுள். கடவுள் எல்லை இல்லாதது. கடவுள் தான்தோன்றி இயக்கம் உடையது அல்ல. கடவுள் நம்மிலிருந்து இயக்கம் பெற்று நம்மை இயக்குகிறது. 

முதல் எனப்படுவது இடமும் காலமும் என்று தமிழர் அடையாளப் படுத்துவதில் இடம் என்பது கடவுள். நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்கள் தான்தோன்றி இயக்கதால் காலம் காட்டுகின்றன.

இதுவரையிலாகத் தெரிவிக்கப்பட்ட செய்தி உங்களுக்கு புரிந்திருந்தால், இத்தனைச் செய்திகளையும் தன் ஒன்னே முக்கால் அடி உள்ள, அறுபத்;தெட்டு ஒலியன் ஓசையில் அமைந்த இந்தத் திருக்குறளில் இத்தனை செய்திகளையும் மிகச்செறிவாக அடக்கப்பட்டிருக்கிறது திருவள்ளுவரால் என்று தெளிய முடியும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

இன்பம் என்றாலும் சரியே, துன்பம் என்றாலும் சரியே இதுவரை நீங்கள் எண்ணியது மட்டுமே உங்களுக்கு கிடைத்திருக்கும். இதனைப் புரிந்து கொண்ட திண்ணியராக, நீங்கள் அடையவேண்டும் என்று விரும்புகிற நன்மைகளை எல்லாம் விசும்பிடம் கேட்டால், உறுதியாக கிடைக்கும் என்பதே இந்தத் திருக்குறள் முன்னெடுக்கும் மந்திரச்செய்தி ஆகும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,283.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.