Show all

சில நாடுகளில் சில அபத்தமான சட்டங்கள் யாவை?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட சில நாடுகளில் சில அபத்தமான சட்டங்கள் யாவை? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சில நாடுகள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை.
'அம்மா! அண்ணன் அடிச்சிட்டான்'
தாயின் தண்டனை நிறைவேற்றம்;
அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு.
தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனை தாய் அரவணைக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம். இது தமிழ்க் குடும்ப ஐயாயிர ஆண்டுகால பழமையின் வெளிப்பாடு.

அரசு நிறுவனங்கள் எப்போதும் நட்டத்தில் இயங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அதெல்லாம் இல்லை, இலாபம் அடைகிற நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டும் என்றால், நட்டம் அடைகிற நிறுவனங்களுக்கு அந்த வரியில் இருந்து இழப்பீடு தரவேண்டியதில்லையா? 

மாதிரிச் சமுதாயமான தமிழ்க்குடும்பம், தன்னுடைய குடும்பம், பிள்ளைகளின் கல்வி, மருத்துவம், தொழில், பிள்ளைகளின் திருமணம், தொழில் நட்டம் ஏற்பட்டால், வட்டிக்கு கடன் பெற்று சரி செய்யும் நிலை என்ற அனைத்துப் பொறுப்புகளுக்கும் மேலாக சட்ட சமுகத்திற்கும் பல்வேறு வரிகள் செலுத்த வேண்டும் என்கிற நிலை. என்று குடும்பப் பொறுப்புகளுக்கே நேரம் போதாத நிலையில், குடும்பங்களில் குற்றம் உருவாவதில்லை. 

மாதிரிச் சமுதாயமான குடும்பத்தின் மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல், சட்ட சமூகம், குடும்பத்தின் உறுப்பினர்களை தனிஆட்களாக்கி, அவர்கள் மீதும், குடும்பத்தின் மீதும் நிர்பந்திக்கிற சாராய வணிகம், வரி, வட்டி, இவைகளே அனைத்துக் குற்றங்களுக்கும் காரணம் ஆகியுள்ளது என்பதுவே உண்மை. 

ஆனால், தமிழ்க் குடும்பத்தில் அமைந்த பெற்றோர் போல, 'அண்ணனை தாய் அரவணைக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம்' என்பதாக, மூன்றாவது வாதியாக சட்டசமூகம் நிறுத்தப்படுவது இல்லை. மாதிரிச் சமுதாயமான குடும்பத்தின் பெற்றோர்களைப் போல பெரிய குடும்பமான சட்ட சமூகம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் வகைக்கு, சில நாடுகள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை.

மேல்முறையீட்டில் பொய் வழக்கு புலப்பட்டாலும் பாதிக்கப் பட்டவனுக்கு இழப்பீடு ஏதும் இல்லை. சில நாடுகள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை. சீர் செய்ய- தமிழ்ச் சான்றோர்கள் எழவேண்டும்.

பழந்தமிழ் நாட்டில் தமிழ்முன்னோர் தமிழ்க் குடும்பம் போலவே நாட்டையும் முன்னெடுத்திருந்தனர் என்பதை, தமிழின் இலக்கிய, இலக்கண, வரலாறுகளில் இருந்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழ்ச்சான்றோர் எழுந்தால் தமிழ்க் குடும்பம் போன்றதான, பொறுப்புள்ள சட்ட சமூகம் சாத்தியமே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.