முன்னோர்கள் வழிபாடு என்பது உலகம் முழுவதும் இருக்கிறது. 'தமிழ் முன்னோர்கள் வழிபாடு' என்றால் என்ன என்கிற தமிழ் மெய்யியலைத் தொலைத்து பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றைய நாள், ஆரியத்தின் அடிச்சுவட்டில், 'முன்னோர்கள் வழிபாட்டை' முன்னெடுக்கும் சிறப்பு நாள் ஆகும். 20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் வழிபாடு என்றாலே தமிழ் முன்னோர்கள் வழிபாடுதாம். மன்னர்கள் கட்டிச் சென்ற பெருங்கோயில்கள் என்றாலும் சரியே மக்கள் கட்டி வழிபடும் சிறு கோயில்கள் என்றாலும் சரியே, அனைத்திலும் இருப்பன தெய்வங்கள்தாம். அவற்றுக்கும் கூட உருவம் கொடுத்து வழிபடுவது தமிழர் மரபு இல்லை. அங்கே வழிபாட்டிற்கான தெய்வ வடிவம் நடுகல்தாம். இன்றைக்கு பெருங்கோயில்களிலும் சரி, சிறு கோயில்களிலும் சரி உருவ வழிபாட்டிற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் நிறைய கற்பனைக் கதைகள் ஏற்றப்பட்டு விட்டன. ஒன்றிற்கு உருவவழிபாட்டுக் கதை. மற்றொன்றுக்கு அருவ வழிபாட்டுக் கதை. உருவம் என்பது பல கைகள், பலதலைகள், விலங்கு முகங்கள், கற்பனை கலந்த மனித வடிவங்கள். அருவம் என்பது குறித்த கற்பனைப் புரட்டுக்களை இங்கே விளக்க முடியாது அத்தனை ஆபாசம். 'முதல் எனப்படுவது இடமும் காலமும்' என்பது தமிழர்களுக்கு எது ஆதி முதல்? என்ற தேடலுக்கு கிடைத்த விடையாகும். அந்த, 'இடமும் காலமும்' ஐந்துவகை ஆற்றல்களாக மலர்வது குறித்து விளக்குவது ஐந்திரம் என்கிற தலைப்பாகும். அந்த ஐந்தில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு மட்டுமே தான்தோன்றி ஆற்றல்கள். ஐந்தாவது விசும்பு. அது எல்லையில்லாத, தான் தோன்றி இயக்கம் இல்லாத வெளி. அந்த இடமான வெளியில், காலமாக நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்கள் தொடர்ந்து இயங்க - மரம் மட்டை என ஓரறிவு உயிரி தொடங்கி ஆறறிவு உயிரி மனிதனில் நீங்கள் நான் என்று அனைத்தும் மலர்கின்றன. நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்களுக்கு கடந்தும் உள்ளும் இருக்கிற இடமான விசும்பை கடவுள் என்றும், நாற்திர ஆற்றல்கள், 'வெளியில்' இறைந்து இயங்குகிற நிலையில் அவற்றுக்கு இறை என்றும் தலைப்பிட்டனர் தமிழர். கடவுள் ஒன்றே ஒன்றுதான். இறைகள் நான்கு மட்டுமே. கடவுள் என்பதும் இறை என்பனவற்றையும் இயற்கை என்று தமிழ்முன்னோர் நிறுவினரே அன்றி கடவுளும் இறையும் எந்த வழிபாட்டு தெய்வங்களுக்குமான தலைப்புகள் ஆகா. கடவுள் ஆற்றலும், இறைகள் ஆற்றலும் தொய்ந்த அம்மா, அப்பா, அறிஞர், சான்றோர், காவலில் ஈடுபடும் வீரன், நாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கும் மன்னன் ஆகியோர் தெய்வங்கள். அவர்களை வழிபட அமைக்கப்பட்ட உருவம் நடுகல். உலகின் எந்த வழிபாட்டு மூலத்தையும் தமிழில் சுட்டும் போது தெய்வம் என்ற தலைப்பில் மட்டுமே கொணர முடியும். கடவுள் இறை என்ற தலைப்புகள் இயற்கை சார்ந்தவை. ஆக மன்னர்கள் கட்டிச் சென்ற பெருங்கோயில்கள் என்றாலும் சரியே மக்கள் கட்டி வழிபடும் சிறு கோயில்கள் என்றாலும் சரியே அனைத்திலும் இருப்பது தெய்வங்கள்தாம். அதையும் கூட உருவம் கொடுத்து வழிபடுவது தமிழர் மரபு இல்லை. அங்கே வழிபாட்டிற்கான தெய்வ வடிவம் நடுகல்தாம். தமிழில் வழிபாடு என்றாலே தமிழ் முன்னோர்கள் வழிபாடுதாம். தமிழ் மக்கள் அவரவர் பெற்றோர் ஆகிய வீட்டு தெய்வம், அவர்களின் குடும்ப முன்னோரான குலதெய்வம் ஆகியோரை கொண்டாடுவதற்கு தெவம் என்கிற தலைப்பை முன்னெடுத்துள்ளனர். தமிழர் திருமணங்களில் வீட்டுத் தெய்வம் கொண்டாடும் நடைமுறை இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வங்களுக்கு தெவம் கொண்டாடுகிற நடைமுறையும் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் நாம் முன்னெடுக்கிற கால வகை நாள்தான். தை ஒன்றில் பொங்கல், ஆடி பதினெட்டில் நீர்ப்பெருக்கு விழா, இந்த நாளில் எங்கள் திருமண நாள், இந்த நாளில் எங்கள் மகவின் பிறந்த நாள் என்றெல்லாம். நாம் எழுத்து அறிவதற்கு முன்னே இயற்கையைக் கற்று தேர்ந்தவர்கள். ஏனென்றால் நம் தாய்மொழியான தமிழே இயற்கை மொழி. எழுத்துக்களைக் கூட்டி ஒலித்தால் சொல் வரும் வகைக்கு – மொழியில் அமைந்த, அமைந்திருக்கிற, அமைக்கப்படவுள்ள ஒட்டுமொத்த சொற்களையும் எழுத அடிப்படையான முப்பது ஒலியன்களைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தியுள்ள மொழி உலகில் தமிழ் மட்டுமே. தமிழில் அ ம் மா என்று எழுதி அம்மா என்று ஒலிக்கலாம் உலகின் அனைத்து மொழிகளிலும் எ எம் எம் எ என்று எழுதி அம்மா என்று ஒலிக்க மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒலிப்பு (ஸ்பெல்லிங்) ஒரு முறையாவது கற்றாக வேண்டும். தமிழன் இயற்கையைக் கற்றுத் தேர்ந்திருந்த நிலையால் - மேற்சொன்னபடி தமிழில் கட்டமைத்துக் கொள்ளப்பட்ட எழுத்துக்களுக்கு முதலானது 'அகரம்' என்பதை தெரிவிக்க ஆதி பகவன் (ஞாயிறு) முதற்றே உலகு (கோள்களுக்கு) என்ற செய்தியை உவமை ஆக்குகிறார் திருவள்ளுவர் ஆரியர்களுக்கு முன்னோர் வழிபாட்டிற்கான, மகாளய அமாவாசை என்கிற சிறப்பு திதி இன்று. திதி அடிப்படையில் தங்கள் முன்னோர்களைக் கொண்டாட ஆரியர்கள் முன்னெடுத்து - முன்பு பத்து மாதங்களுக்கு ஒருமுறையும், தற்போது பனிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் கொண்டாடி வருவது, இந்த மகாளய அமாவாசை திதி. இதற்காக அவர்கள் கட்டமைத்துள்ள செய்தியாக பின்வரும் செய்தி இணையத்தில் தேடக் கிடைக்கிறது. ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கான பித்ரு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது நமது தர்மங்கள் நமக்கு விதித்திருக்கும் கட்டளை. பெற்றோர்களைப் பேணுதல், தெய்வ ஆராதனை, அதிதி வரவேற்பு, சந்நியாசிகளைப் போற்றுதல், பித்ரு காரியங்கள் என ஐவகை தர்மங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். தேவ, பூத, ரிஷி, பித்ரு, வேத யாகங்களில் பித்ருக்களுக்கான யோகமே சிறப்பானது எனப்படுகிறது. இது திதி, தர்ப்பணம் என்னும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகே எள்ளும் நீரும் பிண்டமும் கொடுத்து செய்யப்படும் ஒரு வழிபாடு. நம்மைப் பிறப்பித்து வாழ்வித்துக் கொண்டிருக்கும் நம்முடைய மூதாதையர்களுக்கு நாம் நன்றி காட்டும் நாளே மகாளய அமாவாசை. பகீரதனின் வேண்டுதலுக்காக, அவன் முன்னோர்களின் பாவத்தை அழித்து அவர்களுக்கு நற்கதியை கொடுக்கவே அன்னை கங்கை பூமிக்கு வந்தாள். அதனாலேயே அவளை சாட்சி வைத்து இறந்து போன ஆன்மாக்களை மேலோகம் அனுப்பி வைக்கும் சடங்கை இந்த நாளில் நடத்துகிறோம். பகீரதனின் வேண்டுகோளை நிறைவேற்றிய அன்னை கங்கையிடம், 'இந்த பூவுலகம் இருக்கும் வரை நீங்கள் செய்த நற்காரியத்துக்காக இனி எப்போதும் உங்களை சாட்சி வைத்தே பித்ரு காரியங்கள் நடைபெறும். எங்கே எப்போது பித்ரு காரியங்கள் நடந்தாலும் அங்கு காணப்படும் நீர் நிலைகளில் நீங்களே வந்து ஆசிர்வதித்து, அந்த பித்ரு பிண்டங்களை குறித்த ஆன்மாவுக்குச் சேர்பித்துவிட வேண்டும்!' என்று வேண்டுகோள் விடுக்கிறான் பகீரதன். அவ்வாறே இன்றும் புனித கங்கையின் தலைமையில் அவள் சாட்சியோடு பித்ருக்களை திருப்திப்படுத்தும் காரியங்கள் செவ்வனே நடைபெறுகிறது என்கின்றன புராணங்கள். அதுவுமில்லாமல் மானிடர்கள் மண் வழியாக உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தேவர்கள் அக்னி வழியாக உணவைப் பெற்றுக் கொள்வார்கள். அதுபோலவே இறந்து போன ஆன்மாக்கள் நீர் வழியாக தங்களது உணவைப் பெற்றுக் கொள்வது வழக்கம். இதனாலேயே தொன்று தொட்ட காலம் முதல் நீர் வழியே பித்ரு காரியங்களைச் செய்கிறோம். அதற்கு நன்றியாக நீரில் நீராடி வருணனையும் கங்கையும் வழிபடுகிறோம். ஆண்டு முழுக்க மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் பித்ரு காரியங்கள் செய்ய ஏற்ற காலம் மகாளய அமாவாசை எனப்படுகிறது. இறந்து போன ஒவ்வொரு ஆன்மாவையும் அதற்குரிய திதியில் தர்ப்பணம் கொடுத்து மகிழ்வித்து அதை தெய்வங்களிடம் ஒப்படைப்பதே பித்ரு காரியம் எனப்படும். எல்லா முன்னோர்களின் திதியும் நமக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பதாலும், பித்ருக்கள் அனைவரும் பூலோகத்துக்கு ஒரே சமயத்தில் வரும் காலம் என்பதாலும் இந்த மகாளய அமாவாசை பித்ருக்களை மகிழ்விக்க திதி, தர்ப்பணம், படையல், வழிபாடு, தான தர்மங்கள் செய்ய ஏற்ற நாள் எனப்படுகிறது. குறிப்பாக வாரிசுகள் இல்லாத நம் உறவினர்கள், அகாலமாக இறந்து போன ஆன்மாக்களுக்கு இந்த மகாளய அமாவாசை ஷாந்தி செய்ய ஏற்ற நாள் என்கிறது சாஸ்திரம். இதனால் அறிந்தும் அறியாமலும் போன எல்லா முன்னோர்களையும் நினைவில் நிறுத்தி வழிபட வேண்டிய நாள் இது. இன்று அதிகாலையில் எழுந்து குளித்து, காலை உபவாசம் இருந்து தொடங்கி மதியம் படையல் போட்டு அவர்களை வணங்க வேண்டும். மதியம் சாப்பிடுவதற்கு முன்பு காக்கைக்கும் பசு மாட்டிற்கும் உணவிட வேண்டும். ஆதரவற்றோருக்கு உணவும் தானங்களும் அளிக்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். அதன்பின்னர் பித்ருக்கள், இஷ்ட தெய்வங்களை வேண்டி மதிய உணவு சாப்பிட்டு மகாளய விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். இதனால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும். நாமும் நல்வாழ்வைப் பெறலாம். ஆரியர்கள் மோத்தானவர்களை எரியூட்டி விட்டு எரிப்புச்சாம்பலை ஆற்றில் கலக்கின்றனர். மேற்கண்ட விளக்கத்தில் அதற்கான அடிப்படைகளாக அவர்களின் கருதுகோள் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள், இயற்கை எய்தியவர்கள், காலமானவர்கள் என்றவாறான தலைப்புகளில், உயிரிகளின் கூட்டு இயக்கம் நின்று போவதை: நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர, நான்கு இறைகளோடு கலத்தல் என்றே தமிழ்முன்னோர்கள் நிறுவுகின்ற வகையால், அந்த வகைக்கு இறந்தவர்கள், இயற்கை எய்தியவர்கள், காலமானவர்களை புதைப்பதை தமிழர் மரபாகக் கெண்டுள்ளனர். நான் நமது வரலாறுகளை, இவ்வளவு நீட்டி முழக்கியது, இந்த மகாளய அமாவாசை என்கிற சிறப்பு திதி, தமிழர்களுக்கானதில்லை என்று தெரிவிக்கவே. இதை நாம் கொண்டாடுவது நமது அடையாளம் தொலைத்து அடிமைப்படுவதற்கானது என்று தெரிவிக்கவே.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற குறளில்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,028.