21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126: இன்ப நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போடுவது கடவுளிடம் இன்பத்தைக் கேட்டுப்பெறும் நோக்கத்திற்கானது. கடவுள் இன்பத்தையே ஒருங்கிணைத்துக் கொடுக்கும். துன்ப நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போடுவது கடவுளிடம் துன்பத்தைக் கேட்டுப்பெறும் நோக்கத்திற்கானது. என்று தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் தெளிவு படுத்தியுள்ளது- துன்பத்தை அசைபோட்டு மகிழ்ந்திருக்கும் யாருக்கும் புரியாது இருக்கிறது. கலை இலக்கிய ஊடகங்களும் இதில் மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்க முயலாமல் துன்பஅசைபோடலை ஊக்குவித்து காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன. துன்ப நினைவுகளையே மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்களிடம்இருந்து, இன்பம் பெற்றுக் கொள்வதற்கான கேட்பு இல்லாத நிலையில், கடவுளால் ஒருபோதும் இன்பத்தை அவர்களுக்கு ஒருங்கிணைத்துக் கொடுக்க, முடியவே முடியாது.
துன்ப நினைவுகளை தூக்கி வீசுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,031.