Show all

பதினோராம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும்? தங்களின் மேலான கருத்துகளை வேண்டுகிறேன்

தனியார் பள்ளியில், ஆங்கில வழிக்கல்வியில், மாநில அரசு பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் எனது மகள் படிப்பில் மிகவும் சுமார் வகை, கணக்கில் மிகவும் பின்தங்கியவர். அவர் பதினொன்றாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும்? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் பிள்ளையின் வளர்ச்சியை, வெற்றியை அடிக்கடி பாராட்டி ஊக்குவிக்க உங்களுக்கு நேரமில்லாமல் போனதால் உங்கள் பிள்ளை சுமார் வகை பிள்ளையாக வளர்ந்திருக்கும். 

சுமார் வகைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியும் அரசு பள்ளியும் ஒத்து வராது.

நீங்கள் தனியார்ப் பள்ளியில் சேர்த்திருப்பது சரி. ஆங்கில வழிக்கல்வி உங்கள் பிள்ளைக்கான முதலாவது சிக்கல். எழுத்தறிவை ஆங்கில வழிக் கல்வியில் தொடங்குவதால், ஆங்கிலத்திற்கு இல்லாத, தமிழின் அடிப்படைகளான குறில் நெடில் சிக்கல் தமிழ்ப் பாடத்தில் உங்கள் பிள்ளைக்கு இருக்கும். 

உங்களோடும் சமூகத்தோடும் தமிழ் அடிப்படையில் உரையாடலை முன்னெடுக்கும் உங்கள் பிள்ளைக்கு ஆங்கிலப் பாடத்தில் வாக்கிய அமைப்பு உருவாக்குவதில் சிக்கல் இருக்கும். 

மொழிகள் பாடத்தில் உங்கள் பிள்ளைக்கு எற்பட்ட சிக்கல் உங்கள் பிள்ளையை சுமார் வகையில் தொடர வைத்திருக்கிறது. கணக்கு என்பது அறிவு அல்ல. கணக்கு என்பது கணிப்பு. இந்தக் கணிப்பில் உங்கள் பிள்ளைக்கு தொய்வு ஏற்பட்டது தமிழில் குறில் நெடிலை எழுத்தறிவில் பொருத்த முடியாமல் போனதும், தமிழ் அடிப்படை உரையாடலை ஆங்கிலத்தில் பொருத்த முடியாமல் போனதும் ஆகியவைகளே.

உங்கள் பிள்ளையைச் சுமார் பிள்ளையில் இருந்தும் மீட்க முடியும், உங்கள் பிள்ளையைக் கணக்கில் ஆர்வமுள்ள பிள்ளையாகவும் மாற்ற முடியும். அடுத்த ஆண்டில் உங்கள் பிள்ளைக்கு எந்தப்பாட பிரிவையும் தேர்ந்தெடுக்கவும் முடியும். 

நடப்பு விடுமுறையில் உங்கள் பிள்ளையைப் பாராட்டி, ஊக்குவித்து, பரிசுகள் எல்லாம் வழங்கி, தமிழ் எழுத்துக்களை உயிர் 12, உயிர்க் குறில் 5, உயிர்நெடில் 7, 
மெய் 18 வல்லினமெய் 6, மெல்லின மெய் 6, இடையின மெய் 6, 
உயிர்மெய் 12x18=216, உயிர்மெய்க் குறில் 5x18=90 உயர்மெய் நெடில் 7x18=126,
ஆய்தம் 1 என்று வகைபடுத்தி அனைத்து தமிழ் எழுத்துக்களையும் ஒலிப்பு அளவுகளோடு (மாத்திரை) கற்றுக் கொடுத்துவிடுங்கள்.

நடப்பு விடுமுறையில் தமிழுக்கு முன்னெடுத்த அதே வகையில் தமிழ் அடிப்படையில் இருந்து மாறுபடும் ஆங்கில வாக்கிய அமைப்பு முறையை விளக்கி கற்றுக்கொடுத்து விடுங்கள். 

உங்கள் பிள்ளையைச் சுமார் பிள்ளையில் இருந்தும் மீட்க முடியும், உங்கள் பிள்ளையைக் கணக்கில் ஆர்வமுள்ள பிள்ளையாகவும் மாற்ற முடியும். அடுத்த ஆண்டில் உங்கள் பிள்ளைக்கு எந்தப்பாட பிரிவையும் தேர்ந்தெடுக்கவும் முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,580.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.