தீமைதான் வெல்லுமா! நானும் தீமை செய்யலாமா என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை. 19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இது நன்மையானது, இது தீமையானது, என்பதற்கான அளவு கோல்: இது இவருக்கு சிறப்பாக நலம் புரிந்தது. இது இத்தனை பேருக்கு நலம் புரிந்தது, என்ற அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
என்பது திருக்குறள்.
எது நன்மை எது தீமை என்று எப்படி தீர்மானிப்பீர்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவேன் என்கிறார் பாரதி.
நாட்டுக்கு நன்மையென்றால் ஒரு ஊரை அழிக்கலாம் என்பர் சிலர்.
நன்மை தீமை என்பது யாருக்கு என்பதில்தான் இருக்கிறது.
இங்கே செயல் என்றுதான் பார்க்க வேண்டும்.
நீங்கள் செய்கிற செயல் எத்தனை பேரை பாதிக்கிறதோ அந்த அளவிற்கு அது உங்கள் மீது திருப்பப்படுவதற்கு நூறு விழுக்காடு வாய்ப்பு இருக்கிறது. என்பதை மட்டும் நினைவில் கொண்டு, நிலையான வெற்றிக்காக செயல்படுங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,027.