Show all

மந்திரம். தொடர்கட்டுரை: 16. நாம் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டிய நூற்றிபத்து மந்திரச்சொற்கள்

மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே.

10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியக்கலை ஆகும். 

உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றித்தரும் வகைக்கு உங்களுக்கான வெற்றி சாத்தியமாகும் என்பதே மந்திரக் கலை என்பதறிவோம்.

உங்களின் நினைப்பு எதுவும், விசும்பில் பதிவாகி விசும்பின் எதிரியக்கத்தால், உங்கள் பதிவு உங்களை வழிநடத்தும் விதியாக அமைகிறது. அதனால் 
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் 
என்று மந்திரப்பாடநூல் திருக்குறள் தெரிவிக்கிற வகையில்-
விசும்பு உங்களின் பிள்ளையே என்பதறிக. 

உங்களின் பிள்ளைக்கு நல்ல நல்ல சொற்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அதற்கு தமிழைப் பயிற்றுவிப்பதைப் போலவே, உங்கள் பதிவையே எதிரியக்கம் ஆக்குகிற விசும்பில் பதிய- நூற்றிபத்து சொற்களைப் பட்டியல் இடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். நூற்றிபத்துக்கு சிறப்புக் காரணம் இல்லை. முதற்கட்டமாக நூற்றிபத்து சொற்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சொற்களை அன்றாடம் அல்லது உங்களுக்குத் நினைக்கத் தோன்றும்போதெல்லாம் ஒலித்துப் பழக்குங்கள். ஆம் நீங்கள் பழகுவது அல்ல, விசும்பை பழக்குவது. இந்தச் சொற்களை விசுப்பிற்கு நன்றாகப் பழக்கும் போது நன்மைகள்- நிறைய நன்மைகள்- உங்களுக்குத் தொடர்வதை நீங்கள் நன்றாக உணர முடியும்.

ஏனென்றால் இந்தச் சொற்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்முன்னோர்களால் விசும்பில் பதிவிடப்பட்டு வந்திருக்கிறது. 
இன்றைக்குத் தமிழர்கள் பல்வேறு அயல்களின் பின்னால் வரிசை கட்டி நிற்கின்றனர். இதில் அவர்களுக்கு வாழ்மானமும் கிடைக்கும். ஆனால் நிற்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் தனித்தனியாக அவர்கள் சார்ந்திருக்கும் அயல் புலத்தின் மீதான தகுதி திறமை அடிப்படையில். தமிழர்களின் பிள்ளைகளுக்கும் தொடரும் வகைக்கானது அன்று அது.

இன்னும் பெருவெடி காலம் வரைக்கும் தமிழினுக்கு வாழ்மானம் தொடர, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்முன்னோர்களால் விசும்பில் பதிவிடப்பட்டு வந்திருக்கிற இந்தச் சொற்களை நாமும் விசும்பில் பதிவிட்டு நமது முதன்மையை பல ஆயிரம் ஆண்டுகளாக நிறுவி நமது திண்மையை விசும்பில் பதிவு செய்து கொள்ள முடியும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
என்பது இந்த வகைக்கு நமது முப்பாட்டன் திருவள்ளுவன் நமக்கு தெரிவித்துச் சென்ற செய்தி.

நான்
என் தமிழ்
என் தாய் 
என் தந்தை
என் தலைவி (என் தலைவன்)
என் பிள்ளைகள்
என் குடும்பம்
என் வாழ்க்கை
என் வளமை
என் பொங்கல்விழா
என் மருமகள்
என் மருமகன்
என் பேரக்குழந்தைகள்
என் சுற்றம்
என் மனை
என் வீடு
என் தோட்டம்
நலங்கு
அழகு
காப்பு
அன்பு
அறிவு
மகிழ்ச்சி
அறம்
பொருள்
இன்பம்
என் கல்வி
என் கலை
என் தனித்திறன்
என் தொழில்
என் உழவு
என் வணிகம்
என் வருமானம்
என் வெற்றி
என் வாகை
புகழ்
நிறைவு
பெருமிதம்
பீடு
என் தெரு
என் ஊர்
என் வட்டம்
என் மாவட்டம்
என் தமிழ்நாடு
என் நாவலந்தேயம்
உலகம்
இடம்
காலம்
கிழமைகள்
தமிழ்த்தொடராண்டு
ஐந்திரம்
ஐம்புலன்
ஐந்திணை
குறிஞ்சி 
முல்லை 
மருதம்
நெய்தல்
பாலை
என் தெய்வம்
இறை
என் கடவுள்
என் மந்திரம் 
எண்
சுழியம்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து 
ஆறு
ஏழு 
எட்டு
ஒன்பது
பத்து
எழுத்து
அகரம்
உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயர்மெய் எழுத்து
நாடகம்
இசை
இயல்
எண்ணம்
இயக்கம்
இலக்கியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
திருக்குறள்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
கணியன் பூங்குன்றன்
ஒளவையார்
பொன்முடியார்
செம்புலப்பெயல்நீரார்
கல்லணை
என் முதல்மலை இமயம்
என் முதல் கடல் குமரி
இடத்தில் என் மருதம் சிந்துவெளி
வலத்தில் என் மருதம் கீழடி
அரிக்காமேடு
ஆதிச்சநல்லூர்
கொடுமணல்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. ,ன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,259.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.