90 இது ஒன்பது பத்துதானே; தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்? 900 இது ஒன்பது நூறுதானே; தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால் தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம் இதுதான். 01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழில் தொல்காப்பியர் காலததிற்கு முன்பு- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து என்றே எண்மானம் இருந்தது. நமது வீடுகளில் படி அமைக்கும் போது உயரம் எட்டு அங்குலமும், கிடை பத்து அங்குலத்திலும் அமைப்பார்கள். எட்டு என்றால் எட்டுதல் என்றே பொருள். பத்து என்பது பற்றுதல் ஆகும். ஆக ஒற்றைப்படை எட்டில் முடிந்து, இரட்டைப்படை எண் பத்தில் தொடங்குகிறது. ஆக ஒற்றை படை எண்ணில் எட்டே இறுதி எண்ணாக தமிழில் இருந்தது. பத்தில் இரட்டைப்படை எண் தொடங்கி பதினொன்று, பனிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, இருபது என தொடரும். இரட்டைப் படை எண்ணில் எண்பத்தி எட்டு கடைசி எண் ஆகும். அடுத்து தொடங்கும் மூன்று படை எண் நூறு ஆகும். ஏதோ ஒரு காரணம் பற்றி தமிழன், ஒற்றைப்படை எண்களை எட்டிலிருந்து ஒன்பதாக மாற்றினான். அப்போது எட்டிற்கும் பத்திற்கும் இடையில் ஒரு புதிய எண் அமையும். அந்த புதிய எண்ணுக்கு பழைய பத்து என்பதாக தொல்பத்து என்று பெயர் சூட்டினான். அந்தக் காலம் தொல்காப்பியர் காலமாக இருக்கக்கூடும். இன்னும் சிறப்பாகச் சொன்னால் அந்த முயற்சியில் தொல்காப்பியரின் பங்கு பெரிதாக இருந்திருக்கக்கூடும். அதன் நினைவாகவே தன் இலக்கண நூலுக்கு ‘தொல் (ஒன்பது) காப்பியம்’ பெயரிட்டதோடு ஒவ்வொரு அதிகாரத்திலும்; ஒன்பது ஒன்பது நூற்பாக்களாக அமைத்தார். தமிழில் புதிய பத்து அமைந்து விட்ட காலத்து திருக்குறளில் பத்து பத்து குறள்கள் ஒரு அதிகாரத்திற்கு அமைக்கப் பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் உள்ள ‘தொல்’ ஒன்பதைக் குறிப்பதே ஆகும். பழைய என்ற பொருள் குறித்தது அன்று. ஒருவர் தன் படைப்புக்கு பழைய படைப்பு என்பதாக எப்படி பெயர் வைக்க முடியும்? இயல்புக்கு பொருந்த வில்லையே. தமிழின் புதிய எண்மானத்தில்- ஒன்பது ஒன்று தொல்பத்து என்று அழைக்கப்பட்டது. ஒன்பது பத்து தொல்நூறு என்று பெயரிடப்பட்டது. ஒன்பது நூறு தொள்ளாயிரம் என்று பெயரிடப்பட்டது.
இந்தப் பழைய என்பதற்கான தொல் என்கிற அடை சேர்ப்பு தொள்ளாயிரத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. அடுத்து வரும் எண்களைச் சுட்ட இந்த பழைய என்பதைக் குறிக்கும் தொல் என்கிற அடை தேவைப்படவில்லை.
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம் (இலட்சம் என்பது பழங்காலத்தில் இல்லை)
ஆயிரமாயிரம் ((பத்து இலட்சமும் பழங்காலத்தில் இல்லை) கோடி
பத்து கோடி
நூறுகோடி
ஆயிரம் கோடி
பத்தாயிரம் கோடி
நூறாயிரம் கோடி
ஆயிரமாயிரங்கோடி
கோடிகோடி என்று தமிழ் எண்மானம் தொடரும்.