26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்றைக்கு ஆயிரக்கணக்கான கலைகள் நம்முடைய தொழில் வருமானத்திற்கு உருவாக்கப் பட்டுள்ளன. கணினி சார்ந்தே பல நூறு கலைகள் இருக்கும். ஊடகம் சார்ந்து பல நூறு கலைகள் இருக்கும். இப்படி இன்றைக்கு ஆயிரக்கணக்கான கலைகள் புழக்கத்தில் உள்ளன. மனிதனின் அடிப்படை தேவை உணவு, உடை இருப்பிடம் மட்டுந்தாம். ஆனால் தற்காலத்தில் மனிதன் இவைகளுக்கு செய்கிற செலவு ஒரு இருபது விழுக்காடு மட்டுந்தாம் இருக்கும். மீதி எண்பது விழுக்காட்டு செலவுகளை மற்ற மற்ற கலைகளுக்காகவே மனிதன் ஒதுக்கி வாழ்கிறான். ஆரியர்கள் வரவுக்கு முந்தைய நவலந்தேயத்தில்- ஆம் இந்தியா தமிழர்களால் அந்த பெயரில்தான் அழைக்கப்பட்டது. அதைதான் நாவலந்தேயம் என்று நாம் சொல்ல- ஐரோப்பியர்கள், ந்தேயா என்று உச்சரிக்க- இன்றைக்கு உலகினாரால் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் வடஇந்தியாவில் யாரும் இந்தியா என்று சொல்ல மாட்டார்கள் பாரதம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த நாவலந்தேயத்தில் புழக்கத்தில் இருந்த, அந்த அறுபத்து நான்கு கலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் தெரிவித்திருக்கின்றார்கள். இவற்றில் பல நமக்கு புரியாதுதாம். இருந்தாலும், அறுபத்தி நான்கு வகையான கலைகளில் தமிழ்முன்னோர்கள், திறம் பெற்றிருந்திருக்கின்றனர் என்பதைப் போற்றிக் கொள்வோம்.
1. எழுத்து
2. எழுதுதல்
3. கணக்கு
4. மறைநூல் (மருந்தியல்)
5. காப்பியம் (தொல்காப்பியம்)
6. இலக்கணம்
7. நயனூல் (அறங்கூற்று)
8. கணியம்
9. அறநூல்
10. ஓகநூல்
11. மந்திர நூல்
12. நிமித்திக நூல்
13. கம்மிய நூல் (சிற்பவியல்)
14. மருத்துவம் நூல்
15. உறுப்பமைவு நூல்
16. போர் இலக்கியம்
17. வனப்பு
18. அணிநூல்
19. மதுரமொழிவு
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம்
26. தாளம்
27. விற்பயிற்சி
28. பொன் நோட்டம்
29. தேர்ப்பயிற்சி
30. யானையேற்றம்
31. குதிரையேற்றம்
32. மணிநோட்டம்
33. நிலம்
34. போர்ப்பயிற்சி
35. மல்லம்
36. கவர்ச்சி
37. ஓட்டுகை
38. நட்புப் பிரிப்பு
39. காமநூல்
40. மயக்குநூல்
41. வசியம்
42. இதளியம்
43. இன்னிசைப் பயிற்சி
44. பிறவுயிர் மொழியறிகை
45. மகிழுறுத்தம்
46. நாடிப்பயிற்சி
47. கலுழம்
48. இழப்பறிகை
49. மறைத்ததையறிதல்
50. வான்புகவு
51. வான்செலவு
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல்
53. தன்னுருக் கரத்தல்
54. மாயச்செய்கை
55. பெருமாயச்செய்கை
56. அழற்கட்டு
57. நீர்க்கட்டு
58. வளிக்கட்டு
59. கண்கட்டு
60. நாவுக்கட்டு
61. விந்துக்கட்டு
62. புதையற்கட்டு
63. வாட்கட்டு
64. சூனியம்
என்பன அவைகள்.