Show all

குறள்: 517 அதிகாரம்: தெரிந்து வினையாடல்! தமிழர் மரபில் திருக்குறள்- திருக்குறள் வழியில் தமிழர் வரிசையில்

'தமிழர் மரபில் திருக்குறள்- திருக்குறள் வழியில் தமிழர் வரிசையில்' என்கிற தலைப்பிலான தனிக்கட்டுரைகளில் தமிழரோடு திருக்குறளும் திருகுறளோடு தமிழரும் பின்னிப் பிணைந்திருப்பதை கொண்டாடுவோம்.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில், பத்து ரூபாய்க்கு பேசும் நேரம் கொடுங்கள் என்று கேட்டால், ரூபாய் 7.47க்கு பேசும் நேரம் தருகின்றனர். நம்மிடம் இருந்து கூடுதலாக தண்டப்படுகிற ரூபாய் 2.53ஐ வரி என்று தெரிவிக்கின்றனர். ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் நாம் ரூபாய் 7.47க்கு சேவை பெறும் போது அந்தத் தொகைக்கு ஒன்றிய அரசுக்கு வரியாக ரூபாய் 2.53ஐ வரியாகச் செலுத்துகிறோம் என்றால்- இந்தியாவில் ரூபாய் 7.47க்கு சேவை பெறும் ஒரு பாமரன் அரசுக்கு வரியாக 33.86 விழுக்காடு அதாவது தான் சேவை பெற செலவிடும் தொகைக்கு மூன்றில் ஒரு பங்குக்கு கொஞ்சம்  (0.5266விழுக்காடு) கூடவே செலுத்த வேண்டியுள்ளது. 

உலகத்தில் எந்த மன்னர்கள் காலத்திலும் கூட பாமர மக்களின் ஒரு சிறுசெலவில் இந்த அளவிற்கு வரி தண்டப்பட்டதாகத் தரவுகள் கிடைக்கவில்லை.

ஒட்டு மொத்த இந்தியாவில், திராவிடக் கட்சிகள் தொடர்ந்து ஆளும் தமிழ்நாட்டில் மட்டுமே, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சாரக் கட்டணத்தில் முதல் நூறு அலகு கட்டணம் இல்லாமல் கொடுக்கப்படுகிறது. 
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

இந்தத் திருக்குறள் அடிப்படையில்- இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே, ஆட்சியை யாரிடம் வழங்க வேண்டும் என்று தெளிந்து, திராவிடக் கட்சிகளையே தொடர்ந்து தமிழ்நாட்டு ஆட்சியில் அமர்த்துகின்றனர் என்று பெருமிதம் கொள்ள முடிகின்றது. 

'தமிழர் மரபில் திருக்குறள்- திருக்குறள் வழியில் தமிழர்' என்று மகிழ்ந்து கொண்டாடுவோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.