Show all

கணியக்கலை அடிப்படையில், இன்று எப்படி சாதிக்கலாம்! இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,084.

கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனிமனித முன்னேற்றத்திற்குத் தமிழர் உருவாக்கிய மூன்று கலைகள் 1.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை 2.கணியக்கலை 3.மந்திரக்கலை 

தனிமனித முன்னேற்றத்திற்கான இந்த மூன்று கலைகளில் முதலாவது மட்டுமே, தப்பும் தவறுமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கலைகள், நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும்.

தமிழர் வாழ்ந்து கண்டறிந்த அனுபவங்களைத் தொகுப்பது மிகக் கடினம். ஆனால் தொகுத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு உலக மனிதர்களில் எவ்வளவு உயரம் வேண்டுமானால் தமிழன் வளரமுடியும்.

அந்த முன்னேற்றக்கலைகள் மூன்றில் 1.சாதகம் சோதிடம் என்கிற பலன் அறிகிற நிமித்தகக்கலை. 2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலை. 3.மந்திரக்கலை என்கிற நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற கலை ஆகும்.

2.கணியக்கலை என்கிற இயல்புகளை அறிந்து பொருத்திப் பயன்படுத்தி முன்னேற்றத்தை முன்னெடுக்கிற இந்தக் கலைக்கு- 'பெயர்' தான் அடிப்படை. இந்தக் கலைக்கு உங்கள் பெயரை தமிழில் அமைத்துக் கொள்வது சிறப்பு. அதுவும் நீங்கள் விரும்பும் இயல்பை முன்னெடுக்கிற வகைக்கு அந்த இயல்புக்குரிய எண்ணில் பெயரை அமைத்துக் கொள்ள வேண்டும். 

எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். 

உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வௌ;வேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக வெள்ளி அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 47 ஆகும். அலுமனிய அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 13 ஆகும்.   

அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. பெயர் போலவே, நாம் அமைத்துக் கொண்ட நாளுக்கும் இயல்பு உண்டு. கிழமைக்கும் இயல்பு உண்டு. தொடர்நாளுக்கும் இயல்பு உண்டு.

முதலாவதாக தமிழன் நிறுவிய கிழமைகள் ஏழும் எண் ஒன்றின், உழைப்பு என்கிற பொது இயல்புக்கு உரியன. இரண்டாவதாக தமிழன் நிறுவிய தமிழ் ஆண்டுக்கணக்கின் அடிப்படையிலான மாத நாட்கள் எண் இரண்டின் நிருவாகம் என்கிற பொது இயல்புக்கு உரியன. மூன்றாவதாக அமைந்த தொடர் நாட்கள் எண் மூன்றின் முனைப்பு என்கிற பொது இயல்புக்கு உரியன.

தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்றுடன் தான்தோன்றி இயக்கம் இல்லாத விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில், தான்தோன்றி இயக்கம் இல்லாது நம்மால் இயக்கம் பெற்று நம்மை இயக்குகிற விசும்பை- பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். 

நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் இந்த வகைக்கு பதிவாகிறது. இந்த வகைக்கு என்றால்: நம்மை விசும்பு இயக்குவதற்கு, நாம் கொடுத்த இயக்கமாக, நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் பதிவாகிறது.

இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? அதுபோல, ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். என்பதை தமிழ் முன்னோர் சங்கம் வைத்து கூட்டுச் சிந்தனையால் ஆய்ந்து கண்டிருக்கின்றனர். 
இதைத்தான் திருக்குறள்- 
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது.

இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:-
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல் 

இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாகவே நீங்கள் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அதைப் புரிந்து கொண்டு இந்த இயல்புகளை உறவாக்கிக் கொண்டு முன்னேறவே தமிழர் அமைத்தனர் கணியக்கலை.

இன்றைய நாளையும் கிழமையையும் தொடர் நாளையும் நீங்கள் வெற்றி கொள்ள, நாளின் இயல்பாகிய தொழில்நுட்பமும், கிழமையின் இயல்பாகிய பயணமும், தொடர்நாளின் இயல்பாகிய நிருவாகமும் இன்றைய ஆட்சி இயல்புகள் என்பதை புரிந்து கொண்டு முயல உங்களுக்கு வெற்றி எளிதாகும். இன்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு களம் இறங்குகிறவர்கள், இதைப் புரிந்து கொண்டு சாதிக்க எனது வாழ்த்துக்கள். 

அதாவது கிழமையை (பயணம்) உங்கள் தாய் போலவும், நாளை (தொழில்நுட்பம்) உங்கள் தந்தை போலவும், தொடர்நாளை (நிருவாகம்) உங்கள் குழந்தை போலவும் கையாள வேண்டும் என்பது உங்களுக்கு ஒரு சிறிய குழூஉ. ஏனெனில், இயல்புகள் ஒன்று தாய், இரண்டு தந்தை, மூன்று குழந்தை, நான்கு குடும்பம் என்றே வரிசை கட்டுகின்றன.

உலகம் முழுவதும் முன்னெடுக்கிற கிழமை நம்முடையதுதான். தமிழ்முன்னோர், ஏழு இயல்புகளுக்கு மட்டுமே கிழமை அமைத்துள்ளனர். கிழமைக்கு எட்டாவது புகழ் இயல்பும் ஒன்பதாவது போரியல் இயல்பும் இல்லை. இன்றைய கிழமையின் இயல்பு பயணம். ஆகவே பயணத்தை உங்கள் தாயாக என்று புரிந்து கொண்டு முனைக.

கணியக் கலை அடிப்படையில் இன்றைய வெற்றிக்கு  முனைகிறவர்கள் இன்று கார்த்திகை15 என்கிற நிலையில்- இன்றைய நாளின் ஆட்சி இயல்பு தொழில்நுட்பம். ஆகவே தொழில்நுட்பத்தை உங்கள் தந்தையாக என்று புரிந்து கொண்டு முனைக. 

மூன்றாவதாக தொடர்நாள் என்ற ஒரு கணிப்பும் தமிழர்களுக்கு உண்டு என்பதை சில நிமித்தகக் கலைஞர்கள் மட்டுந்தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தொடர்நாளின் இயல்பு நிருவாகம். ஆகவே நிருவாகத்தை உங்கள் பிள்ளையாக என்று புரிந்து கொண்டு முனைக. 

எடுத்துக்காட்டுக்கு உங்கள் இயல்பு, பயணம் என்று வைத்துக் கொண்டால் இன்றைக்கு தாய் பயணமாகவும் தந்தை தொழில் நுட்பமாகவும், பிள்ளை நிருவாகமாகவும் அமைகிற நிலையில் வெளிநாட்டுப் பயணத்திற்கு கூட நல்ல வெற்றி வாய்ப்பு உண்டு என்றும், வாகன வகைகள் இன்றைக்கு உங்களுக்கு வெற்றிதரும் என்றும் அறிக. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.