மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே. உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் நினைப்பில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அதை நீங்கள் நிறைவேற்றிதரும் வகைக்கு உங்களுக்கான வெற்றி சாத்தியமாகும். நமக்கு நம் தாய் தந்த இரண்டு உடைமைகள்: ஒன்று, அவளின் குருதிப்பாலில் வளர்ந்த நம் உடம்பு இரண்டு, அவளின் மூச்சுக்காற்றில் நாம் கற்ற தமிழ்மொழி. முதலாவது மந்திரத்தை தமிழுக்கே எழுத வேண்டும் என்றும், இரண்டாவது மந்திரத்தை நமது உடம்புக்கு எழுதவேண்டுவது குறித்தும் முதலாவது இரண்டாவது மந்திரங்கள் எழுதும் முறையை முன்னெடுத்தோம்;. குடும்பம் தமிழர் உலகிற்கு அளித்த கொடை. ஒவ்வொரு ஆண் மகனுக்கும் ஒவ்வொரு பெண் மகளுக்கும் தலைவன் தலைவி என்கிற அதிகாரம் கிடைக்கும் ஒரு மாதிரி சமுதாயம் குடும்பம் ஆகும். அந்தக் குடும்பத்தின் தலைவன் தலைவி பேரளவான பொறுப்புகளை கொண்டு இயங்குகின்றனர். குடும்பத்தின் தலைவன் (தலைவி) ஆகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அமைதியான நேரத்தில் நீங்கள் உங்கள் மனைவி, (கணவன்) உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள் அனைவரும் நலமாகவும், பாதுகாப்பாகவும், அனைத்து வகையான வளத்தோடும் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும் என்று வாழ்த்துங்கள். இதற்கான ஒரு மந்திரத்தை உங்கள் சொந்த கருத்தில் சொந்த புலமையில், உரைநடை வடிவத்திலோ, செய்யுள் வடிவத்;திலோ கட்டமைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஓதி வருங்கள். திருக்குறள் மந்திரக்கலைக்கான பாட நூல் என்பதால் திருக்குறளில் குடும்பம் குறித்து அமைந்துள்ள திருக்குறளைத் தேடுவதிலும் அதை ஓதுவதிலும் உங்கள் நேரத்தில் சிலமணித் துளிகளை ஒவ்வொரு நாளும் செலவிடலாம்.
13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது கலை. மற்ற இரண்டு கலைகள் ஒன்று சோதிடம் சாதகம் உள்ளடங்கிய நிமித்தகம், இரண்டு கணியக்கலை ஆகும்.
அடுத்து நாம் கட்டவேண்டிய மூன்றாவது மந்திரம். நமது குடும்பத்திற்கு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,200.